உயிருடன் இருக்கும் தலைவர் சாவதற்கு போராட்டம் நடத்தும் நாட்டு மக்கள்..

x

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாஷா அமினி போலீஸ் காவலில் மரணம் அடைந்ததில் இருந்து ஈரான் போராட்டக்களமாக மாறியுள்ளது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் தென்கிழக்கு எல்லையை பகிர்ந்துள்ள ஈரானின் ஜாஹெடான் நகரில் மக்கள் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்தை வலியுறுத்தி மாபெரும் பேரணி நடத்தினர். பொதுவாக அரசுக்கு எதிரான போராட்டங்களில், அதிபர் பதவி விலக கோரிக்கை விடுக்கப்படும் நிலையில், ஈரான் தலைவரின் மரணத்தை வேண்டி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்