சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி - குடும்பத்துடன் திரண்ட திரைப் பிரபலங்கள்

x

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டியை திரைப் பிரபலங்கள் பலர் கண்டுகளித்தனர். நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் போட்டியை பார்த்து ரசித்தார். இதேபோல், நடிகை நயன்தாரா, அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் போட்டியை நேரில் பார்த்து ரசித்தார். ரசிகர்கள் உடன் செல்ஃபி எடுத்தும் அவர் மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்