அந்தரங்க வீடியோ மிரட்டல்... அரசியல் தலைவர்களை அலறவிட்ட இளம்பெண்... வசமாக சிக்கிய பாஜக, பிஜூ ஜனதா தளம் பிரமுகர்கள்

x

தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் என முக்கிய நபர்களை குறிவைத்து அழகான பெண்கள் மூலம் வலைவிரித்து மிரட்டிய இளம்பெண்ணின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது. மாநில அரசையே அதிர வைத்த பெண்ணின் குற்றப்பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கடந்த வாரம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் தான் 28 வயதான அர்ச்சனா நாக். பார்ப்பதற்கு ஒன்றும் அறியாதவராய் இருக்கும் இந்த அர்ச்சனா நாக், திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் ஆட்டிப்படைத்துள்ளார். இதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் இளம்பெண்களை பகடைக்காயாக அர்ச்சனா நாக் பயன்படுத்தியுள்ளார். மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த 20 முக்கிய புள்ளிகள், பாஜக பிரமுகர்கள், முன்னாள் எம்பி, எம்.எல்.ஏ.க்கள்அர்ச்சனா நாக்கின் வலையில் விழுந்தவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.

செல்வந்தர்களிடம் தன்னை வழக்கறிஞராக அறிமுகப்படுத்தி கொண்ட அர்ச்சனா நாக், அவர்களின் உல்லாசத்திற்காக பெண்களை அனுப்பி வைத்துள்ளார். தன்னால் அனுப்பப்படும் பெண்களுடன், சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்யும் அர்ச்சனா நாக், அதை அவர்களிடம் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். மோசடிகள் மூலம்,11 கோடி ரூபாய் பணத்தை அர்ச்சனா நாக் பெற்றுள்ளார்.

அதன் மூலம் புவனேஸ்வரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா, நகாராவில் பண்ணை வீடு, கார் ஷோரூம், உயர் ரக கார்கள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் என ஆடம்பரத்தின் உச்சத்தில் வாழ்ந்துள்ளார். அர்ச்சனா நாக்...

இந்த நிலையில் அர்ச்சனா நாக், 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக நயப்பள்ளி காவல்நிலையத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்தார். இதேபோல், புவனேஸ்வர் காவல் துணை ஆணையர் அலுவலகத்திலும், கந்தகிரி காவல் நிலையத்திலும் அர்ச்சனா நாக் மீது அடுத்தடுத்து மிரட்டல் புகார்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து அர்ச்சனா நாக்கை கைது செய்த போலீசார், அவரின் செல்போன், லேப்டாப், பென் டிரைவ், வங்கி கணக்கு விவரங்களை பறிமுதல் செய்தனர். அர்ச்சனாவின் இந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ஜகபந்து சந்த், ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளார். ஜகபந்து சந்த் தன்னை, ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் என அறிவித்து கொள்வதால், எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அர்ச்சனா நாக்கின் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் அலறவிட்ட அர்ச்சனா நாக்கின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, மாயாபினி என்ற பெயரில் திரைப்படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை பிரபல ஒடிசா தயாரிப்பாளர் ஸ்ரீதர் மார்தாவின் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்