சர்வதேச மலை மாரத்தான் போட்டி- ஸ்பெயின் வீரர் ஜோர்னட் வெற்றி -170 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அசத்தல்

x

3 நாடுகளை உள்ளடக்கி நடைபெற்ற மலை மாரத்தான் போட்டியில் ஸ்பெயின் வீரர் கிலியன் ஜோர்னட் வெற்றி பெற்றார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய 3 நாடுகள் வழியாக மலை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இறுதியில் 170 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை சுமார் 19 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து ஸ்பெயின் வீரர் ஜோர்னட் சாம்பியன் ஆனார்.


Next Story

மேலும் செய்திகள்