சர்வதேச சமையல் - Souffle pancake... நாவூற வைக்கும் ஜப்பான் நாட்டு கேக்...

x

சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம சமைக்க இருக்கும் ரெசிபி... ஜப்பான் நாட்டுல ரொம்பவே ஃபேமஸ்ஸா இருக்குற Souffle Pancake... அதாவது நம்ம ஊர்ல எப்டி பஜ்ஜி, போண்டாலா ஈசியா தெருவோரமே கிடைக்குதோ... அதுமாதிரி ஜப்பான்ல ஈசியா கிடைக்குற தெருவோர உணவு தான்... இந்த Souffle Pancake...

கேக்கா... கேக்லாம் செய்ய அவன்லாம் வேனுமே... அப்டினு உங்க மைன்ட் வாய்ஸ் யோசிக்கிறது எனக்கும் கேக்குது... பட் இந்த ரெசிபியோட ஸ்பெஷல் என்னனா ? சாதாரனமா நம்ம தோசை கல்லுலயே பண்றது தானாம்...

ஹ்ம்ம்... ரொம்ப நேரம் ரெசிபிய பத்தியே புகழ்ந்துட்டு இருந்தோம்னா... அப்புறம் ஓவரா பசிக்க ஆரம்பிச்சுடும்... அதுனால சட்டு புட்டுனு சமைச்சு சாப்பிட ஆரம்பிக்கலாம் வாங்க...

Souffle Pancake சமைக்க தேவையான பொருட்கள்... முட்டை, மைதா, பேக்கிங் சோடா, பால், வெண்ணிலா எசன்ஸ், சர்க்கரை, எண்ணெய், வெண்ணை... அவ்வளோதான் இனி சமைக்க ஸ்டார்ட் பண்ணலாம்...

முதல்ல ரெண்டு முட்டைய எடுத்து உடைச்சு... அதுல இருக்க மஞ்சள் கருவையும்... வெள்ளை கருவையும் தனி தனியான பாத்திரத்துல பிரிச்சு வச்சுக்கனும்...

அடுத்து... மஞ்சள் கரு இருக்குற பாத்திரத்துல ரெண்டு ஸ்பூன் பால ஊத்தி... நல்லா மிக்ஸ் பண்ணிக்கனும்...

இப்போ அதுல கால் ஸ்பூன் பேக்கிங் சோடா... 3 ஸ்பூன் மைதாவையும் சரியான அளவுள எடுத்து போட்டு... மறுபடியும் நல்லா மிக்ஸ் பண்ணனும்... அடுத்து ரெசிபிக்கு மணமும்.. டேஸ்ட்டும் குடுக்க... அரை ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்ஸ ஊத்தி... லைட்டா கிளரி விட்டா பாதி வேலை முடிஞ்சுது...

இம்புட்டு நேரம் மஞ்சள் கருல இருக்க சமையல் வேலையெல்லாம் பண்ணிட்டோம்... அடுத்து வெள்ளை கருல இருக்க சமையல் வேலைகள பண்ணலாம் வாங்க...

வெள்ளை கருல... ரெண்டு ஸ்பூன் சக்கரைய போட்டு... நல்லா க்ரீம் பதத்துக்கு வர வரை... அடிச்சு மிக்ஸ் பண்ணனும்... ஏன் அடிக்கடி மிக்ஸ் பண்ண சொல்லுறோம்னா... அப்போ தான்.. கேக் நல்லா புஸு புஸுனு சாஃப்ட்டா வரும்...

ஹ்ம்ம்... வெள்ளை கரு க்ரீம் பதத்துக்கு வந்ததும்... அதை அப்டியே எடுத்து முதல்ல செஞ்சு வச்ச மஞ்சள் கருல போட்டு கடைசியா ஒரு கலக்கு கலக்குனோம்னா... Souffle Pancake செய்ய... மாவு ரெடி...

சமையலின் இறுதிகட்டமா... சூடேரிய பான் பாத்திரத்துல லைட்டா எண்ணெய்ய பூசி... மாவ கோன்ல புடிச்சு... குஷ்ப்பு இட்லி சைஸ்ஸுக்கு... மாவ ஊத்தி... ஒரு அஞ்சு நிமிஷம்... அங்குட்டு ஒரு பொரட்டு... இங்குட்டு ஒரு பொரட்டுனு ரெண்டு பக்கமும்... பொண்நிறத்துல பொரட்டி எடுத்தா...

சாஃப்ட்டான... மிருதுவானா... Souffle Pancake ரெடி...

முக்கியமா இந்த ரெசிபில இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டேஸ்ட் கிடைச்சா நல்லாருக்கும்னு நெனைச்சீங்கனா... கேக்... ஆவி பறக்க சூடா இருக்கும்போது... அரை ஸ்பூன் பட்டர்ர... கேக் மேல உருக விட்டு... கொஞ்சம் தேன ஊத்தி பதமா வெட்டி சாப்ட்டு பாருங்க... சும்மா வேற லெவல்ல இருக்கும்...


Next Story

மேலும் செய்திகள்