சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் தகுதி

x

டெல்லியில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு 3 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். 48 கிலோ எடைப்பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் ருமேனியா வீராங்கனையை வீழ்த்தினார். 66 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு பம்போரியா, நியூசிலாந்தின் காராவை சாய்த்தார். இதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை ப்ரீத்தியும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்