சாகுந்தலம் படம் பற்றி சமந்தா பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள்

சாகுந்தலம் படம் பற்றி சமந்தா பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள்
Published on

சாகுந்தலம் படம் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். ஒரு பூவால் தனக்கு தோலில் அலெர்ஜி ஏற்பட்டு கிட்ட தட்ட 6 மாதம் கழித்து தான் அது சரியானதாக நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு , இந்தி என மூன்று மொழிகளில் டப்பிங் பேசியுள்ள அவர், சாகுந்தலம் படத்தில் தனக்கு இருப்பது உண்மையான கூந்தல் அல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் ஒரு பாடல் காட்சிக்காக சுமார் 30 கிலோ எடையில் லெஹெங்கா உடையணிந்து நடித்ததாகவும், தான் ஒரு பக்கம் சுற்றினால் அந்த உடையே அவரை வேறு பக்கம் இழுத்து சென்றதாகவும் இதனால் 10 , 15 டேக் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவிலேயே ஹைலைட்டாக, படப்பிடிப்பின் போது முயல் தன்னை கடித்துவிட்டதாகவும், உண்மையில் முயல்கள் கியூட் மட்டும் கிடையாது என்றும் கலகலப்பாக கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com