"இது போல் ஆனந்தம் வேறில்லையே"- சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிகள்.. ஒன்றுகூடி கொண்டாட்டம்

x

காதல் என்பது இயற்கையானது. தெய்வீகமானது. ஆனால் அந்தக் காதலுக்குத்தான் இந்த நவீன காலத்திலும் எத்தனை எதிர்ப்புகள். சாதி, மதம், ஏற்றத்தாழ்வால் பிரிக்கப்படும் காதலர்கள் ஒருபக்கம் என்றால், சாதி மத மறுப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

அப்படி சாதி மறுப்பு திருமணங்கள் செய்த நூறு தம்பதியர்களை ஒன்றிணைத்து , மகிழ்வித்து கொண்டாடும் விதமாக இந்தியா யுனைடெட் என்ற மக்கள் அமைப்பு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் "கலகலப்பு 100" என்ற விழாவை நடத்தியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சாதி மத மறுப்பு திருமண ஜோடிகள், தாங்கள் அனுபவித்த கஷ்டங்களையும் அதனை நம்பிக்கையோடு எதிர்கொண்டது குறித்தும் இங்கு பேசியதை பலரும் கை தட்டி வரவேற்றார்கள்.


Next Story

மேலும் செய்திகள்