கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு - செயல்படாத 4 சிசிடிவி கேமராக்கள்

x

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழக கேரள மாநில எல்லையோர சோதனை சாவடிகளில், தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

அதன்படி முள்ளி வனத்துறை சோதனை சாவடியில் வனதுறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இங்குள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களும் பழுதாகி இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளன.

வனத்துறைக்கு சொந்தமான சிறிய வகை, பழைய மாடல் கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன.

பழுதாகி கிடக்கும் நவீன சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய, காவல்துறைக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்