பணிக்கு வராத‌ பெண் காவலருக்கு ஆப்சென்ட் போட்ட இன்ஸ்பெக்டர் - தீக்குளிக்க முயன்ற பெண் காவலர்

x

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கைதிக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு சார்பு ஆய்வாளர் பெருமாள், பெண் காவலர் செல்லம்மாள் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், பெண் காவலர் செல்லம்மாள் குடும்ப‌ சூழ்நிலை காரணமாக பணிக்கு செல்லாத‌தால், வருகைப் பதிவில் செல்லம்மாளுக்கு ஆப்செண்ட் என இன்ஸ்பெக்டர் சுபக்குமார் பதிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்லம்மாள், புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுபகுமாரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதோடு, தனது சாவுக்கு நீங்களே காரணம் எனக் கூறி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அருகில் இருந்த காவலர்கள் செல்லம்மாவை தடுத்து காப்பாற்றினர்.

இதையடுத்து, விசாரணை அறிக்கை அடிப்படையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, பெண் காவலர் செல்லம்மாவை சஸ்பெண்ட் செய்து எஸ்பி மனோகர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்