“ரிமாண்ட்“ என எச்சரித்த இன்ஸ்பெக்டர்.. ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி பெண் - கோவையில் பரபரப்பு

x

ரிமாண்ட் செய்துவிடுவேன் என ஆய்வாளர் எச்சரித்ததால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி பெண், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவர், குட்டையில் இருந்து நீர் ஆற்றுக்கு போகும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக கூறி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது காவல் ஆய்வாளர் சாந்தகுமார், தேவையில்லாமல் அமர்ந்திருந்தால் ரிமாண் செய்துவிடுவேன் என எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்