ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி விவகாரம் வெளியான அதிர்ச்சி தகவல்..

x

பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 6 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட, ஐ.எப்.எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள்,16 கார்கள், 46 அசையா சொத்துக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இடைதரகர்கள் பிரபு மற்றும் வெங்கடேசனை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சேர்ந்து, சுமார் 300 கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து கொடுத்தது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6 கோடிரூபாய் மதிப்பிலான 100 சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சொத்துகளை முடக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்