ஒரே நாளில் 35 பேர் உயிரை பறித்த கோயில் கிணறு.. ராம நவமியில் கொடூரம்

x
  • மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள படேல் நகர் பகுதியில், பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோயில் அமைந்துள்ளது.
  • இக்கோயிலில் ராமநவமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்ற நிலையில், அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
  • அப்போது திடீரென கோயிலில் உள்ள படி கிணற்றின் கூரை இடிந்து விழுந்துள்ளது.
  • இதில் ஏராளமானோர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
  • இந்தநிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக இந்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
  • 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் வீடு திரும்பி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்