திடீரென குலுங்கிய இந்தோனேசியா..உடனடியாக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

x

இந்தோனேஷியா அருகே, சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா அருகே, சுமத்ரா தீவில், பூமிக்கு அடியில் 84 கிலோ மீட்டர் ஆழத்தில், ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 3 அலகுகளாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பேரிடர் மீட்புக்குழு, பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்