"பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடுத்த இந்தியா"

x

பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச போரில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படுவதற்கு எதிரான போரை வலுப்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விவாதத்தில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச போரில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது என்றார்.

கடந்த 3 தசாப்தங்களாக அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருப்பதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதை எதிர்க்க சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிக்க இந்தியா துடிப்புடன் பங்காற்றி வருவதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்