இந்தியாவின் மிகப்பெரிய iPhone பேக்டரி தமிழகத்தில்..! | Iphone Factory
இந்தியாவின் மிகப் பெரிய ஐஃபோன் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ஓசூரில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
தமிழக, கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள ஓசூரில், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஐஃபோன் உற்பத்தி ஆலை அமைய உள்ளதாகவும், தற்போது ஃபாக்ஸ்கான், பெக்ட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள், ஐஃபோனை உற்பத்தி செய்து வருவதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் மட்டும் தனது உற்பத்தியை அடுத்த 2 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு, பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story
