விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்..! | ISRO | Rocket

x

அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்புடன் வடிவமைக்கப்பட்ட 150 செயற்கைக்கோள்களுடன், இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அருகே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட, 150 சிறிய செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம், வெற்றிகரமாக பட்டிப்புலத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில்,1 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்கள் காற்றின் தரம், ஓசோன் படலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு தரவுகளை சேகரிக்க உள்ளது. நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் , இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்