ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி

ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி
Published on
• நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் அரைசதம் கடந்த நிலையில், 45வது ஓவரில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
X

Thanthi TV
www.thanthitv.com