இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடர்...அரையிறுதியில் ரைபாகினா வெற்றி

x

இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் போலந்தைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் உடன், ரைபாகினா மோதினார். இதில் அதிரடியாக ஆடிய ரைபாகினா, 6க்கு 2, 6க்கு 2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தார். அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இஹா, தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்