ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி

x

இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. ஹராரேவில் இந்திய நேரப்படி நண்பகல் 12.45 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில், தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா இன்று களமிறங்கும். அதே சமயம், ஆறுதல் வெற்றிக்காக ஜிம்பாப்வே கடுமையாக முயற்சிக்கக் கூடும். இந்தப் போட்டியில் முதல் 2 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்