காதல் வெற்றி, தோல்வி.. கவலை.. அனைத்துக்கும் அப்பவே மருந்து போட்ட மாயக்குரல் - 'Rare piece'-க்கு பிறந்த நாள்

x

பின்னணிப் பாடகர் ஹரிஹரன் இன்று தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... அவரைப் பற்றிய ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பைக் காணலாம்...

கண்களை மூடி பாடல்களைக் கேட்டால் அதில் நடித்துள்ள நடிகர்கள் தானே பெரும்பாலும் நம் கண்முன் தோன்றுவர்... ஆனால், அதற்கு மாறாக அதைப் பாடிய பாடகரின் உருவம் நம் கண்முன் வருமென்றால் அந்த காந்த சக்தி ஹரிஹரனின் குரலுக்குத் தான் உண்டு...

1992ம் ஆண்டு வெளியான "ரோஜா" திரைப்படம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மட்டுமல்ல... பாடகர் ஹரிஹரனுக்கும் அறிமுகப்படம் தான்...

"நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்" என்ற பாடலைப் போல, ஹரிஹரன் பாடினாலும் சரி... ரீங்காரம் செய்தாலும் சரி... நம்மை மறந்து தாளம் போட்டு தலையாட்டி ரசிப்போம்...

90களில் அசுர வேகத்தில் வளர்ந்து வந்த விஜய், அஜித்தின் படங்களில் பெரும்பாலும் நம் மனதில் நிற்கும் பாடல்களின் குரல் ஹரிஹரனுடையது தான்...

உயிரே...உயிரே...வந்து என்னோடு கலந்து விடு... என்று ஹரிஹரன் அழைக்க...கேட்போரின் உயிருடன் அவர் குரல் இரண்டறக் கலந்து விடும்..

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி என்று அவர் பாடத் துவங்கையிலே...உண்மையாகவே உயிரில் கோடி மின்னல் பாயும்... வார்த்தைக்கு இல்லாத வலிமை மவுனத்திற்கு உண்டா என கேட்டு குரலில் காதல் தேன் சொட்டச் சொட்ட ஹரிஹரன் பாடி இருக்கும் இரவா பகலா பாடல் தான் காதலர்கள் இரவும் பகலும் கேட்கும் தேசிய கீதம்...

துள்ள வைப்பதும் ஹரிஹரன் குரல் தான்...கவலையை மெள்ள வைப்பதும் அவர் குரல் தான்... காதல் வெற்றியைக் கொண்டாட வைப்பதும் ஹரிஹரன் தான்... காதல் தோல்வியெனில் மயிலிறகைக் கொண்டு மருந்து தடவுவதும் அவரே தான்... காற்றின் வழியே காதுக்குள் நுழைந்து... உயிரில் கலக்கும் மாயம் ஹரிஹரனின் ஆத்ம குரலுக்கு உண்டு...


Next Story

மேலும் செய்திகள்