இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக்கொலை... அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

x

அமெரிக்காவில் ஃபிலடெல்பியா நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூட் சக்கோ என்ற 21 வயது இளைஞர் பணி முடிந்து திரும்பிய போது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வழிப்பறி முயற்சியின் போது, இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது பெற்றோர், ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்