அயர்லாந்தின் பிரதமராக மீண்டும் இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு

x

அயர்லாந்தின் பிரதமராக மீண்டும் இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வாகியுள்ளார்.

அயர்லாந்தின் பிரதமராக இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு லியோ வரத்கர் பதவியேற்றார். இதன் மூலம் 38 வயதில் அயர்லாந்து பிரதமராக தேர்வானதன் மூலம் அந்நாட்டின் மிக இளம் வயது பிரதமராக அவர் அறியப்பட்டார். இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சியை பிடித்திருந்தது. ஆனால் முதல் இரண்டாண்டு கூட்டணி கட்சி தலைவரான மைக்கேல் மார்டின்

அயர்லாந்து பிரதமராக பதவி வகித்து வந்தார். அதன் பிறகு லியோ பிரதமராக இருப்பார் என முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன் படி, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மெஜாரிட்டி வாக்குகள் லியோ பெற்றதை அடுத்து, மீண்டும் அயர்லாந்து பிரதமராக லியோ வரத்கர் பதவியேற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்