மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு - கதறி அழுத மீனவரின் மனைவி - கண்ணீர் காட்சிகள்

x

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்றனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது.

இதில், காயமடைந்த வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவலறிந்த வீரவேலின் மனைவி கதறி அழுதார். அவரை நேரில் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்