"எங்கள நீங்க முட்டாள் ஆக்கலாம்..சாய்பாபா பார்த்துட்டு தான் இருக்காரு" - வீரர்கள் மறைமுக தாக்கு

x

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சேர்க்கப்படாததற்கு இந்திய வீரர்கள் சிலர் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளனர்.

இளம் வீரர் பிரித்வி ஷா, எல்லாவற்றையும் சாய்பாபா பார்த்துக் கொண்டிருப்பதாக பதிவிட்டு உள்ளார்.

நிதிஷ் ராணா ஹோப் என்றும், ரவி பிஷ்னோய், சறுக்கலைவிட மீட்சிதான் வலிமையானது என்றும் பதிவிட்டு உள்ளனர்.

இதேபோல் உமேஷ் யாதவ், தான் முட்டாள் ஆக்கப்படலாம் என்றும், ஆனால் கடவுள் பார்த்துக் கொண்டிருப்பதை மறந்து விடாதீர்கள் என்றும் தனது ஸ்டேட்டஸில் பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்