"இந்திய பேட்டர்கள் எச்சரிக்கையுடன் பேட் செய்ய வேண்டும்" - விராட் கோலி

x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய பேட்டர்கள் எச்சரிக்கையாக பேட் செய்ய வேண்டுமென விராட் கோலி கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, நாளை இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ஓவல் மைதானத்தின் சூழல் சவாலானதாக இருக்கும் என கருதுவதாக விராட் கோலி கூறியுள்ளார். முழுமையாக பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் ஆடுகளம் கிடைக்காது என குறிப்பிட்ட அவர், இந்திய அணி பேட்டர்கள் எச்சரிக்கையுடன் பேட் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். பேட்டர்கள் அதிக கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டுமெனவும் விராட் கோலி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்