ஒரே நேரத்தில் பாகிஸ்தான்-சீனாவுக்கு பதிலடி..! 'சின்குன் லா' திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்...

x
  • லடாக்கில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், சின்குன் லாவில் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பாகிஸ்தான், சீன தரப்பிலிருந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எல்லையில் பாதுகாப்பு உள் கட்டமைப்பை இந்தியா விஸ்தரித்து வருகிறது.
  • அந்த வகையில் இமாச்சல பிரதேச மாநிலம் சின்குன் லாவில் சுரங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மணாலியிலிருந்து லடாக் செல்லும் சாலையில் உயரமான மலைகளில் பனிகாலங்களில் பனிப்பொழிவால் வாகனங்கள் செல்வது சவாலாகிறது.
  • இந்த சூழலில் அங்கு ஆயிரத்து 681 அடி ஆழத்தில் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது.
  • இப்போது சுரங்கத்தை ஆயிரத்து 681 கோடி ரூபாயில் கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுரங்க பணிகளை 2025 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • எந்த காலநிலையிலும் ராணுவ தளவாடங்கள் லடாக் செல்ல வழிவகுக்கும் சுரங்கம் பாகிஸ்தான், சீனாவுக்கு பதிலடி கொடுக்க முக்கிய பங்கு வகிக்கும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்