நெதர்லாந்தை நொறுக்கிய இந்தியா - 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

x

சிட்னி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 9 ரன்களில் அவுட் ஆகி மீண்டும் ரசிகர்களை ஏமாற்றினார். எனினும் கேப்டன் ரோகித் சர்மா - கோலி ஜோடி சிறப்பாக ஆடியது. அரைசதம் அடித்து 53 ரன்களுக்கு ரோகித் ஆட்டமிழக்க, மறுமுனையில் நடப்பு டி20 தொடரில் தனது 2வது அரைசதத்தை கோலி பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், அதிரடியாக ஆடி 25 பந்தில் அரைசதம் விளாசினார். இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை மட்டுமே நெதர்லாந்து எடுத்தது. அஸ்வின், அக்சர் படேல், புவனேஸ்வர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியால் குரூப்-2 பிரிவின் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்