வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இந்தியா.. |

x

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை எடுத்தது.

மேற்கிந்தியாவில் உள்ள டொமினிக்காவில் நேற்று, இந்தியாவுக்கும், வெஸ்ட் இண்டீஸ்க்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இந்திய சார்பில் அஸ்வின், 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில், எந்த விக்கெட்டுகளும் இழப்பின்றி 80 ரன்களை எடுத்தது. இந்திய அணி 70 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், ஜெய்ஸ்வாலும், ரோஹித் சர்மாவும் நாட் அவுட் பேட்ஸ் மேன்களாக களத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்