இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி... தவற விட்ட கேட்சுகள்.. தட்டி தூக்கிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி...

x

கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்தது. இந்திய வீரர் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி 45-வது சதத்தை விளாசிய நிலையில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்