ஏழைகளே இல்லாத இந்தியா?.. அதிசயம் ஆனால் உண்மை.. ரிப்போர்ட் சொல்லுது.. இவ்ளோ பணம் இருந்தா நீங்களும் பணக்காரர் தான்

x

2046ல் இந்திய மக்கள் தொகையில், ஏழைகளின் விகிதம் வெறும் 2 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று பிரைஸ் ஆய்வறிக்கை கூறுகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

நாடு முழுவதும் சேரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி என்ற தலைப்பில் பிரைஸ் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

1.25 லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களை எழைகள் என்றும்,

1.25 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களை கீழ் நடுத்தர குடும்பங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களை நடுத்தர வர்க்கம் என்றும்,

30 லட்சம் ரூபாய்க்கும் அதிக ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களை பணக்காரர்கள் என்றும் வகைப்படுத்துகிறது இந்த அறிக்கை.

2020-21ல் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 43.2 கோடியாக, மக்கள் தொகையில் 31 சதவீதமாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

2046-47ல், இவர்களின் எண்ணிக்கை 101.5 கோடியாக, அன்றைய மக்கள் தொகையில் 61 சதவீதமாக அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஏழைகளின் எண்ணிக்கை 2020-21ல் 19.6 கோடியாக, மக்கள் தொகையில் 14 சதவீதமாக உள்ளது.

2046-47ல் இவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக, அன்றைய மக்கள் தொகையில் 2 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 2020-21ல் 73.2 கோடியாக, மக்கள் தொகையில் 51 சதவீதமாக உள்ளது.

2046-47ல் இவர்களின் எண்ணிக்கை 18.4 கோடியாக, 11 சதவீதமாக சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பணக்கார்களின் எண்னிக்கை 2020-21ல் 5.6 கோடியாக, மக்கள் தொகையில் 4 சதவீதமாக உள்ளது.

2046-47ல் இவர்களின் எண்ணிக்கை 43.7 கோடியாக, ௨௬ சதவீதமாக அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்