இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்ட் போட்டி..பட்டையை கிளப்பிய இந்திய அணி

டொமினிக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில், முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும், கோலி 76 ரன்களும் எடுத்தனர். 171 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடந்த வெஸ்ட் இண்டீஸ் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வீரர் அஷ்வின் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அறிமுக போட்டியில் சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com