IND vs SL 1st ODI...திடீரென விலகிய ஸ்டார் பவுலர்...இந்தியாவுக்கு பின்னடைவா?

x

IND vs SL 1st ODI...திடீரென விலகிய ஸ்டார் பவுலர்...இந்தியாவுக்கு பின்னடைவா?


இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் விலகியுள்ளார். முன்னதாக காயத்தில் இருந்து விலகியதாக, இலங்கை ஒருநாள் தொடரில் பும்ரா சேர்க்கப்பட்டதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து கவுகாத்தியில் இந்திய ஒருநாள் அணியுடன் பும்ரா இணைந்தார். இந்நிலையில் பந்துவீச்சை பலப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேசமயம் பும்ராவுக்கு மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்