சுழன்றடித்த சூர்யகுமார்; நியூஸி.ஐ அலற விட்ட தீபக் ஹூடா... இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
x

மவுன்ட் மாங்கனுயி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக ஆடியது. நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, சிக்சர் மழை பொழிந்த சூர்யகுமார் யாதவ், சதம் விளாசினார். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 191 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து பவுலர் டிம் சவுதி கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் கேப்டன் வில்லியம்சன் நின்றாலும், மந்தமான ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்தினார். இறுதியில் 19வது ஓவரில் 126 ரன்னுக்கு நியூசிலாந்து ஆல்-அவுட் ஆனது. ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்