"வறுமையின் நிறம் சிவப்பு" - துன்ப நாடு பட்டியலில் இந்தியா,USA.. 2022க்கான பட்டியல் வெளியீடு

x

உலகின் முன்னணி பொருளாதார நிபுணரான Steve Hanke ஆண்டுதோறும் துன்பம் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறார். துன்பக்குறியீடு என்பது வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன் விகிதங்கள், தனிநபர் வருவாய் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை கொண்டு கணக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நாடுகளின் துன்பக்குறியீடு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

157 நாடுகளில் மேற்கொண்ட இந்த ஆய்வில் ஜிம்பாப்வே முதலிடத்தை பிடித்துள்ளது. அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் பணவீக்கம் காரணமாக ஜிம்பாப்வே பரிதாபகரமான நிலையை அடைந்திருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே தவிர்த்து வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா ஆகியவை முதல் 15 இடங்களை பிடித்துள்ளன.

இந்த துன்ப குறியீடு பட்டியலில் இந்தியாவிற்கு 103வது இடம் கிடைத்துள்ளது. தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், உலகின் மிக துயரமான நாடுகளின் பட்டியலில் 35 வது இடத்தில் உள்ளது. பணவீக்கம் பாகிஸ்தானின் துயரத்திற்கு முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா இந்த பட்டியலில் 134வது இடத்தில் உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த பின்லாந்து, துன்பக் குறியீட்டில் 109வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மிக குறைவான துன்பம் உடைய நாடாக சுவிட்சர்லாந்து 157 வது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த அடுத்த இடங்களில் குவைத், அயர்லாந்து, ஜப்பான் , மலேஷியா , தைவான் , நைஜர், தாய்லாந்து ஆகியவை உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்