'ஜி 20-க்கு தலைமையேற்கும் இந்தியா'... "உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம்" - பிரதமர் மோடி

x

அடுத்த ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்க இருப்பது, ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியிடம், அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவது தொடர்பான தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் தொடங்கி பல்வேறு ஜி-20 தொடர்பான சந்திப்புகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளன. இதையடுத்து, உலகில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வர ஜி-20 மாநாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதோடு, இம்முறை ஜி-20 சந்திப்புகளில் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்