டி20 உலக கோப்பை தொடரில் "சரியான உணவு வழங்குவதில்லை.." - இந்திய வீரர்கள் அதிருப்தி

x

ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சாப்பாடு இல்லாமல், சமைக்காத சான்ட்விச் மட்டுமே வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

நாளை நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டபோது, சரியான உணவு வழங்கவில்லை என இந்திய வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குளிர்ச்சியான சூழல் நிலவும் சிட்னியில் சூடான உணவுகள் வழங்குவதில்லை என்றும், பயிற்சிக்கு பிறகு சாப்பிட சமைக்கான பச்சை காய்கறிகள் இருக்கும் சான்ட்விச் மட்டுமே தருவதாக இந்திய வீரர்கள் புகார் அளித்துள்ளனர்.

தாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கும், பயிற்சி எடுக்கும் மைதானத்திற்கும் 60 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் உணவு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், உலக கோப்பை தொடர்களில் அனைத்து நாட்டு வீரர்களுக்கும் ஒரே மாதிரியான உணவையே ஐசிசி வழங்கி வருவதாகவும், மதிய உணவு வேளைக்கு பிறகு வீரர்களுக்கு சூடான உணவு வழங்கும் நடைமுறை ஐசிசியில் இல்லை என்றும் கூறியுள்ளது.

மேலும், பயிற்சிக்கு பிறகு வீரர்களுக்கு சூடான உணவு வழங்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்