சீனாவின் வாய்ப்புகளை தட்டித்தூக்கிய இந்தியா | ரூ.20,000 கோடிக்கு ஐபோன் ஏற்றுமதி இலக்கு | Appleiphone

x

மத்திய அரசின் பி.எல்.ஐ. ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் ஏற்றுமதி, ஏப்ரல் - டிசம்பர் காலக்கட்டத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் சீனாவில் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது, இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி அரை பில்லியன் டாலர்களை தாண்டியது. இதனிடையே, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்களை உற்பத்தி செய்ய, ஐபோன்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான், விஸ்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்