இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வெற்றியை தொடருமா இந்தியா..?

x

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வெற்றியை தொடருமா இந்தியா..?


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2 க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. பகல் ஒன்று முப்பது மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில், காயத்தில் இருந்து குணமடைந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் களமிறங்க உள்ளதால, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்