உலக நாடுகளே திரும்பி பார்க்க சீனாவுக்கு பயம் காட்டிய இந்தியா - "சத்தமே இல்லாம சம்பவம் நடக்கும் இனி"

x

இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 2022-23ல் 36.89 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் அதிக பங்களிக்கும் டாப் 5 பொருட்களின் பட்டியலில் முதல் முறையாக ஸ்மார்ட்போன் இடம்பிடித்துள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி, 2021-22ல் 45,000 கோடி ரூபாயாக இருந்து, 2022-23ல் 88,726 கோடி ரூபாயாக இரு மடங்கு அதிகரித்துள்ளது. விலை மதிப்பின் அடிப்படையில் ஏற்றுமதிகளில் முதல் இடத்தில் டீசல் உள்ளது. 2022-23ல் 3.04 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுஇரண்டாம் இடத்தில் உள்ள வைரங்களின் ஏற்றுமதி 1.76 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மூன்றாம் இடத்தை விமான எரிபொருள் ஏற்றுமதி பிடித்துள்ளது. அதன்படி 2022-23ல் 1.38 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நான்காம் இடத்தில் உள்ள பெட்ரோல் ஏற்றுமதி 1.19 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. விலை மதிப்பின் அடிப்படையில், ஏற்றுமதியில் ஐந்தாம் இடத்தை ஸ்மார்ட்போன் பிடித்துள்ளது. 2021-22ல் இது ஒன்பதாம் இடத்தில் இருந்தது ஒப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியில் உலக அளவில் சீனா முதல் இடத்திலும், வியட்நாம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. 2022ல் சீனாவின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி 10.55 லட்சம் கோடி ரூபாயாகவும், வியட்நாமின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி 2.74 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.

ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், வியட்நாமை முந்தி, இரண்டாம் இடத்திற்கு முன்னேற இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்