இந்தியா - நியூசி. 2வது ஒருநாள் போட்டி பாதியிலேயே நின்றது

x

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி, மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

ஹாமில்டனில் இன்று காலை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 12 புள்ளி 5 ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ள நிலையில், கடைசி ஒருநாள் போட்டி வருகிற 30ம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்