"இந்தியா என்றால் ஊழல்" - தொழிலதிபர் நாராயணமூர்த்தி பேச்சால் பரபரப்பு | Narayana Murthy | India

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, அவ்வப்போது பொது விவகாரங்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய, நாராயண மூர்த்தி, இந்தியாவையும் சிங்கப்பூரையும் ஒப்பிட்டுப் பேசினார். இந்தியா என்றாலே ஊழல், மோசமான சாலைகள், அடிக்கடி மின் தடை ஆகியவைதான் யதார்த்தம் என்றும், சிங்கப்பூர் என்றாலோ தூய்மையான சாலைகள், மாசு இல்லா நகரங்கள், ஏராளமான மின்சக்தி என்பதே யதார்த்தமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இளம் வயதினர் தங்கள் விருப்பத்தைவிட, சமூகத்தில் மாற்றம் உண்டாக்கும்படியாக, தங்கள் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நாராயணமூர்த்தி கேட்டுக்கொண்டார். நாராயண மூர்த்தியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com