"பட்டினி, வேலையின்மை கொண்ட நாடு இந்தியா" - சர்ச்சையான பேச்சு.. மத்திய அமைச்சர் விளக்கம்

x

இந்தியாவில் பட்டினி, வேலையின்மை மற்றும் தீண்டாமை போன்றவற்றை மக்கள் எதிர்கொள்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டி ஏழை மக்கள் அதிகம் வாழும் பணக்கார நாடு இந்தியா என தெரிவித்தார். இதோடு, நாட்டில் மக்கள் வறுமை, பட்டினி, வேலையின்மை, பணவீக்கம், சாதி பாகுபாடு, தீண்டாமை உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். இதோடு, நாட்டில் 124 மாவட்டங்களில் அடிப்படை கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் இல்லாததால், மக்கள் அதிகளவில் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக அவர் பேசினார். மத்திய அமைச்சர் ஒருவரே நாட்டின் தற்போதைய நிலையை இவ்வாறு சுட்டிகாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாடு வளர்ச்சி பாதையை சீக்கிரம் அடைவது குறித்து தாம் பேசிய கருத்துக்களை சிலர் திரித்து சர்ச்சையாக்கி, அதில் ஆனந்தம் அடைந்து வருவதாக நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்