எல்லையில் வாலாட்டிய சீன வீரர்கள்.. ஒட்ட நறுக்கிய இந்திய வீரர்கள் - 3 நாட்கள் கழித்து வெளியான தகவல்

அருணாச்சல பிரதேசம் மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய- சீன ராணுவம் இடையே சண்டை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
x

எல்லையில் அவ்வப்போது ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடும் சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இருநாட்டு வீரர்கள் இடையே கடந்த வெள்ளிக்கிழமை சண்டை வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரோந்து பணியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீற முயன்ற சீன படைகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்துள்ளதாகவும், சண்டையில் இருதரப்பு வீரர்களும் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. சண்டையை அடுத்து இருதரப்பு வீரர்களும் தங்கள் நிலைக்கு திரும்பியதாகவும், பிராந்திய கமாண்டர்கள் தலைமையில் கொடி கூட்டம் நடத்தப்பட்டு, அமைதியை திரும்ப கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு மோதலில் 20 இந்திய வீரர்கள், 40-க்கும் அதிகமான சீன வீரர்கள் உயிரிழந்தனர். இது இருதரப்பு உறவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்