நியூஸிலாந்தை 'கிரில்' செய்த கில்.. மேஜிக் காட்டிய 'லார்ட்' தாகூர் - ஒயிட்வாஷ் செய்த இந்தியா..!

x

இந்தூரில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது.

இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர்.

அடுத்து நியூசிலாந்து அணி பேட் செய்த நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர் கான்வே சதம் விளாசினார்.

எனினும் நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்