"இந்தியாவும் ஆஸி.யும் மிகச்சிறந்த நண்பர்கள்.. சிறப்பான உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்" - ஆஸி. பிரதமர் அந்தோனி அல்பனீஸ் பெருமிதம்

கிரிக்கெட்டில் போட்டி போட்டாலும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சிறப்பான உலகை உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கூறி உள்ளார்.

4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ், இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலியப் பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அல்பனீஸ், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த நண்பர்கள் என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஒவ்வொரு நாளும் வலுப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com