சஞ்சு சாம்சன் தலைமையில் இந்திய ஏ அணி.. வெளியான அறிவிப்பு

x

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும், இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அணியில், பிரித்வி ஷா, அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ராஜாத் பட்டிதார், கே.எஸ்.பரத், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஷாபாஸ் அகமது, ராகுல் சஹார், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் அங்கத் பவா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்