317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடிய இந்தியா…

x

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, தொடரை ஒயிட்வாஷ் செய்தது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 390 ரன்கள் குவித்தது.

இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

இருவரும் முறையே 166 மற்றும் 116 ரன்களை குவித்தனர்.

இதையடுத்து 391 என்ற கடின இலக்குடன் விளையாடிய இலங்கை அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 73 ரன்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்