விண்ணை முட்டும் விமானம் கட்டணம் - எவ்வளவு தெரியுமா?

x

கோடை விடுமுறை எதிரொலியாக உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்துள்ளது.பள்ளி கோடை விடுமுறை நிறைவடைவதையொட்டி மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாலும் தட்கல் டிக்கெட் கிடைக்காததாலும் விமானத்தில் செல்ல முயற்சி செய்கிறார்கள். தற்போது விமானத்தில் 24 மணி நேரத்திற்கு முன்பு பதிவு செய்யும் உடனடி டிக்கெட் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். சென்னையிலிருந்து கோவை செல்ல விமான கட்டணம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும், மதுரை, திருச்சி, தூத்துக்குடி செல்ல 10 ஆயிரம் வரையிலும் அதிகரித்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் தமிழக நகரங்கள் போக புனே, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களுக்கும் விமான கட்டணம் அதிகரித்துள்ளது. ரயிலில் முன்பதிவு டிக்கெட் உறுதியாகாத நிலையில், விமான கட்டணமும் அதிகரிப்பதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்