சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

x

சீனாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

சீன அரசின் பூஜ்ஜிய கொள்கை தளர்வுக்குப் பிறகு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் சீன பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், தென் கொரியா, தைவான், மொராக்கோ ஆகிய நாடுகள் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சீனாவின் வூஹான், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்